
England-New Zealand Series: Williamson Returns, Conway To Fill Ross Taylor's No.4 Spot (Image Source: Google)
நியூசிலாந்து அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டேவான் கான்வே. தற்போது 30 வயதான டெவோன் கான்வே இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 767 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 63.92. கான்வே ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் 200 ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கான்வே ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவுக்காக சிறப்பாக விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வில்லியம்சன் காயம் காரணாமாக விலகியதால் அவருக்குப் பதிலாக 3ஆவது இடத்தில் கான்வே விளையாடியுள்ளார். தற்போது வில்லியம்சன் நன்றாக உள்ளார். நியூசிலாந்தின் நட்சத்திர வீரர் ராஸ் டெய்லர் சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுப் பெற்றுள்ளார்.
அதனால் அவரது இடத்திற்கு பொறுத்தமானவராக கான்வே இருப்பார் என பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.