
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இன்று நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதி வருகின்றன. இந்த நிலையில் நாளை உலகக் கோப்பை தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி காலை 10:30 மணிக்கு இமாச்சல பிரதேசம் தர்மசாலா மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது.
இரண்டாவது போட்டி இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மதியம் 2:30 மணிக்கு தொடங்கவுள்ளது. இத்தோடு பாகிஸ்தான் அணி ஹைதராபாத்தில் இருந்து கிளம்பி வேறு இடங்களுக்கு செல்கிறது. வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் இந்த உலகக் கோப்பை தொடரில் ஏற்கனவே தர்மசாலா மைதானத்தில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் மிக எளிதாக ஆப்கானிஸ்தான் அணியை பங்களாதேஷ் அணி வீழ்த்தி இருந்தது. அந்தப் போட்டியில் மைதானத்தின் வெளிவட்டத்தில் ஃபீல்டிங் செய்யும் பொழுது, மைதானத்தின் தரைப்பகுதி மிகவும் இலகுவாக இருந்தது. அப்படியே பெயர்ந்து வந்தது. இதனால் டைப் செய்யும் வீரர்களுக்கு பெரிய காயங்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது. இது உலகக் கோப்பை தொடரை நடத்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் மீது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது.