Advertisement

ஆஷஸ் டெஸ்ட்: ஆட்டத்தின் பரபரப்புக்கிடைய மலர்ந்த காதல் - வைரல் காணொளி!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ரசிகர் ஒருவர் தனது தோழிக்கு காதலை வெளிப்படுத்திய காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 10, 2021 • 19:39 PM
England supporter proposes to Australian fan during Ashes Test at the Gabba
England supporter proposes to Australian fan during Ashes Test at the Gabba (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி ஹப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 425 ரன்களை குவித்தது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

Trending


 

இந்த நிலையில் இப்போட்டியின் இடையே மைதானத்தில் ரசிகர் ஒருவர் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்தினார். மோதிரத்தை பரிசாக கொடுத்து காதலை அவர் கூறியதும் அவரது தோழி ஏற்றுக்கொண்டார்.

இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement