ஐபிஎல் ஒத்திவைப்பு இந்திய அணிக்கு பலமாக அமைந்துள்ளது - ராஸ் டெய்லர்!
ஐபிஎல் நிறுத்தப்பட்டது இந்திய கிரிக்கெட் அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது என நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதற்கான இந்திய அணி தற்போது மும்பையில் அவர்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் 14 நாட்கள் பயோ-பபுளில் இருந்த பிறகு, ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து சென்று, பிறகு அங்கு 10 நாட்களுக்கு மீண்டும் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.
Trending
இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் மூத்த வீரர் ராஸ் டெய்லர், ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட போதிய அவகாசம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
இத்தொடர் குறித்து பேசியுள்ள ராஸ் டெய்லர், “இந்தியாவில் எதிர்பாராதவிதமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. ஒருவேளை ஐபிஎல் முழுமையாக நடந்திருந்தால், இந்திய அணிக்கு இந்த தொடரில் பயிற்சி பெறுவதற்கு கால அவகாசம் குறைவாக இருந்திருக்கும். ஆனால், இப்போது அவர்களுக்கு போதுமான ஓய்வு கிடைத்துவிட்டது. ஆகையால், இந்திய பவுலர்கள் முழு உடல் தகுதியுடன் இருப்பார்கள்.
அதேசமயம், இறுதிப் போட்டிக்கு முன்பு, நாங்கள் இங்கிலாந்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதனால், எங்களுக்கு போதிய அனுபவம் கிடைக்கும். இது எங்களுக்கு இந்தியாவை விட கூடுதலாக பலனை வழங்கும்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now