
England Tests 'great preparation' for WTC final against India: Tim Southee (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஜூன் 18ஆம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.
இதற்கிடையில் நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய இங்கிலாந்து தொடரில் ஜூன் 02ஆம் தேதி முதல் விளையாடுகிறது. இதற்காக இரு நாட்டு அணிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து தொடர் நாங்கள் பயிற்சி பெற மிகவும் உதவியாக இருக்கும் என நியூசிலாந்து அணியின் டிம் சௌதி தெரிவித்துள்ளார்.