
England to lock horns with Pakistan in 2 T20Is on Oct 13, 14 in Rawalpindi (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்பு பாகிஸ்தானில் இரு ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது.
சுமர்16 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்கிற இங்கிலாந்து அணி அடுத்த வருடமும் வருகை தந்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 போட்டிகள் அக்டோபர் 13, 14 தேதிகளில் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளன. இதன்பிறகு இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் விளையாட துபைக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளன.