ENG vs IND, 1st Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 4) தொடங்குகிறது.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 4) தொடங்குகிறது.
Trending
இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரிட்துளது.
போட்டி தகவல்கள்
- இடம் - ட்ரெண்ட்பிரிஜ் மைதானம், நாட்டிங்ஹாம்
- நேரம் - பிற்பகல் 3.30 மணி
போட்டி முன்னோட்டம்
இந்திய அணி
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 வீரர்களை தேர்வு செய்வதில் கேப்டன் விராட் கோலிக்கு சவால் காத்திருக்கிறது. சுப்மன் கில் காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் ரோகித்சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பயிற்சியின் போது அகர்வால் ஹெல்மட்டில் பந்து தாக்கியது. இதனால் அவர் முதல் போட்டியில் ஆடமாட்டார். எனவே கே.எல்.ராகுல் தொடக்க வீரராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் மிடில் ஆர்டர் வரிசையில் புஜாரா, கோலி, ரகானே, ரிஷப்பண்ட் உள்ளனர். புஜாராவின் ஆட்டம் சமீப காலமாக மோசமாக உள்ளது. அதேபோல ரகானே உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்பது சந்தேகம். அவர் விளையாடாவிட்டால் ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு கிடைக்கும்.
சுழற்பந்து வீரர்களில் அஸ்வின், ஜடேஜா ஆகியோரும், வேகப்பந்து வீரர்களில் பும்ரா, முகமது ஷமி, இசாந்த் சர்மா ஆகியோரும் இடம் பெறுவார்கள். முகமது சிரா ஜுக்கு வாய்ப்பு சற்று கடினமே.
இந்திய அணி கடைசியாக இங்கிலாந்தில் 2007ஆம் ஆண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பிறகு ஆடிய 3 தொடரிலும் இந்திய அணி தோல்விடைந்து தொடரை இழந்தது. கடைசியாக 2018ஆம் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இதனால்14 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு தொடரை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் ஆடுவது கூடுதல் பலமே. ஆனால் அந்த அணி சமீபத்தில் நியூசிலாந்திடம் தொடரை இழந்து இருந்தது. மேலும் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸும், ஆர்ச்சரும் தொடரிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்லி, ஸாக் கிரௌலி, பேர்ஸ்டோவ், பட்லர் என வலிமையான பேட்டிங் ஆர்டரைக் கொண்டுள்ளதால், இங்கிலாந்து அணி நிச்சயம் இந்தியாவிற்கு சவாலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ், சாம் கரண், ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் இருப்பது இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய ஆட்டங்கள் - 126
- இந்தியா வெற்றி - 29
- இங்கிலாந்து வெற்றி - 48
- டிரா ஆனா போட்டிகள் - 49
உத்தேச அணி
இந்தியா - ரோஹித் சர்மா, சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கே), அஜிங்கியா ரஹானே, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த் (வாரா), ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி
இங்கிலாந்து - ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி, ஜாக் கிரௌலி, ஜோ ரூட் (கே), ஹசீப் ஹமீத்/ ஜானி பேர்ஸ்டோ, டேனியல் லாரன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரண், மார்க் வூட்/ ஒல்லி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - ரிஷப் பந்த், ஜோஸ் பட்லர்
- பேட்டர்ஸ் - விராட் கோலி, ஜோ ரூட், ஜாக் க்ராலி, ரோரி பர்ன்ஸ்
- ஆல் -ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன்
- பந்துவீச்சாளர்கள் - முகமது சிராஜ், முகமது ஷமி, ஜேம்ஸ் ஆண்டர்சன்
Win Big, Make Your Cricket Tales Now