ENG vs PAK, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று லீட்ஸில் நடைபெறுகிறது.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.
தற்போது டி20 தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி, பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 31 ரன்கள்
வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
Trending
இந்நிலையில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜூலை 18) லீட்ஸில் நடைபெறுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs பாகிஸ்தான்
- நேரம் - இரவு 7 மணி
- இடம் - ஹெடிங்லி, லீட்ஸ்
போட்டி முன்னோட்டம்
பாகிஸ்தான் அணி
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் ஒயிட் வாஷ் ஆன நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் முதல் டி20 போட்டியை வெற்றி பெற்று அசத்தியது.
அதிலும் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் இருவரது ஆட்டமும் இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களை வச்சு செய்தது. அதன்பின் களமிறங்கிய ஃபகர் ஸமான், முகமது ஹபீஸ் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு சில பவுண்டரிகளை அடித்து அணிக்கு உதவினர்.
இதனால் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் அந்த அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. அதேபோல் பந்துவீச்சில் ஷாஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி ஆகியோர் சிறப்பான ஃபார்மில் இருப்பது அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது.
இங்கிலாந்து அணி
ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதிலும் முதல் போட்டியில் தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.
மேலும் முதல் போட்டியில் சதமடித்த லியாம் லிவிங்ஸ்டோன் இன்றைய போட்டியிலும் தனது அதிரடியை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பந்துவீச்சை பொறுத்தவரை முதல் போட்டியில் செய்த தவறுகளை திருத்தி, இன்றைய போட்டியில் பந்துவீச்சாளர் மிக முக்கிய பங்கினை வகிப்பார்கள் என்றே தெரிகிறது. ஏனெனில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி தோற்கும் பட்சத்தில் டி20 தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உத்தேச அணி
இங்கிலாந்து - ஜானி பேர்ஸ்டோவ்/ ஜோஸ் பட்லர், டேவிட் மாலன், ஜேசன் ராய், ஈயோன் மோர்கன் (கே), ஜோஸ் பட்லர், மொயீன் அலி, லூயிஸ் கிரிகோரி, சாகிப் மஹ்மூத், டேவிட் வில்லி, டாம் கரண், ஆதில் ரஷீத்.
பாகிஸ்தான் - முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கே), சோஹைப் மக்சூத், முகமது ஹபீஸ், ஃபக்கர் ஜமான், அசாம் கான், சதாப் கான், இமாத் வாசிம், ஷாஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவூப், முகமது ஹஸ்னைன்
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - முகமது ரிஸ்வான், ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர்
- பேட்ஸ்மேன்கள் - பாபர் அசாம், முகமது ஹபீஸ், சோஹைப் மக்சூத், ஜேசன் ராய்
- ஆல்ரவுண்டர்கள் - லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி
- பந்து வீச்சாளர்கள் - ஹசன் அலி, சாகிப் மஹ்மூத், டேவிட் வில்லி
Win Big, Make Your Cricket Tales Now