
England vs South Africa, 2nd T20I - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
இந்தியாவுக்கு எதிராக அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மழையால் 1 – 1 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்நிலையில் இதையடுத்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை கார்டிஃபில் உள்ள சோஃபியா கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.