Advertisement

ENG vs SA, 2nd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மான்செஸ்டரில் நடைபெறுகிறது.

Advertisement
England vs South Africa, 2nd Test - Cricket Match Prediction, Fantasy 11 Tips & Probable 11
England vs South Africa, 2nd Test - Cricket Match Prediction, Fantasy 11 Tips & Probable 11 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 24, 2022 • 04:24 PM

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 24, 2022 • 04:24 PM

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஆகஸ்ட் 25) மான்செஸ்டரில் நடைபெறுகிறது. 

Trending

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர்
  • நேரம் - 3.30 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் படுமட்டமான பேட்டிங்கை வெளிப்படுத்தி படுதோல்வியைச் சந்தித்தது. அதிலும் குறிப்பாக ஒல்லி போப்பை தவிற மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டியதே அந்த அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜேக் லீக், ஒல்லி ராபின்சன் ஆகியோர் இருப்பது நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளது.

அதேசமயம் டீன் எல்கர் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங், பவுலிங் என அசத்தியதன் காரணமாக இங்கிலாந்தை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

அதிலும் காகிசோ ரபாடா, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, கேசவ் மஹாராஜ், மார்கோ ஜான்சன் என தங்களது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் அடுத்த போட்டியில் அவர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிரது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 154
  • இங்கிலாந்து - 64
  • தென் ஆப்பிரிக்க - 35
  • முடிவில்லை - 55

உத்தேச லெவன்

இங்கிலாந்து - அலெக்ஸ் லீஸ், ஸாக் கிரௌலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ்(கே), பென் ஃபோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்

தென் ஆப்பிரிக்கா - டீன் எல்கர்(கே), சரேல் எர்வீ, கீகன் பீட்டர்சன், ஐடன் மார்க்ரம், ரஸ்ஸி வான் டெர் டுசென், கைல் வெர்ரின்னே, மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, லுங்கி இங்கிடி.

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர் - ஜானி பேர்ஸ்டோவ், பென் ஃபோக்ஸ்
  •      பேட்டர்ஸ் - டீன் எல்கர், ஒல்லி போப், ராஸ்ஸி வான் டெர் டுசென்
  •      ஆல்ரவுண்டர்கள் - ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கேசவ் மகாராஜ்
  •      பந்துவீச்சாளர்கள் - ஜேம்ஸ் ஆண்டர்சன், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement