
England withdraws from Pakistan tour in October (Image Source: Google)
இங்கிலாந்து ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்தன.
அக்டோபர் 13 மற்றும் 14ஆம் தேதி ராவல்பிண்டியில் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. இங்கிலாந்து மகளிர் அணி டி20 தொடரைத் தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவிருந்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே, பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி போட்டி தொடங்குவதற்கு சற்று முன்னதாக கடைசி நேரத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரணம் காட்டி பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.