
England's Ben Foakes Ruled Out Of New Zealand Tests, Unlikely To Play Series Against India (Image Source: Google)
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் டெஸ்ட் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஆகியவற்றில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜூன் 2ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான நியூசிலாந்து அணி கடந்த வாரம் இங்கிலாந்து சென்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இத்தொடரில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பென் ஃபோக்ஸ் தோள்பட்டை காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் மூன்று மாத காலம் ஓய்வில் இருக்க வேண்டியுள்ளதால் இந்திய அணியுடனான தொடரிலிருந்து விலகுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.