
England's World Cup Winning Coach Trevor Bayliss Joins Sydney Thunder (Image Source: Google)
கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் ட்ரெவர் பேலிஸ். அதன்பின் அவரது ஒப்பந்த காலம் முடிந்ததையடுத்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார்.
இந்நிலையில் 58 வயதான ட்ரெவர் பேலிஸ், பிக் பேஷ் லீக் அணியான சிட்னி தண்டர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய பேலிஸ், “சிட்னி தண்டர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் தண்டர் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு சீசனில் சிறப்பாக செயல்பட்டு இறுதி போட்டிக்கு முன்னேற வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு” என்று தெரிவித்துள்ளார்.