
ENGW vs INDW, 1st ODI: England fight back to post a competitive score on the board (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி டாமி பியூமண்ட் 7 ரன்களிலும், எம்மா லாம்ப் 12 ரன்களிலும், சோபியா டாங்க்லி 29, ஆலிஸ் கேப்ஸி 19 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.