
ENGW vs NEW: Lea Tahuhu's allround brilliance keeps series alive (Image Source: Google)
இங்கிலாந்து - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே சீரான இடைவெளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. இதனால் 78 ரன்களுக்குள்ளாகவே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் களமிறங்கிய பர்ண்ட் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் 48.3 ஓவர்களில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் தஹுஹு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.