
ENGW vs NZW : New Zealand Womens finishes off 244/8 of their 50 overs (Image Source: Google)
நியூசிலாந்து மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 4ஆவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி வீராங்கனைகள் சூஸி பேட்ஸ் 17, லாரன் டன் 11, மேடி கிரீன் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த செட்டர்வைட் - சோபி டிவைன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் சோபி டிவைன் 41 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் செட்டர்வைட் அரைசதம் அடித்த கையோடு பெவிலியன் திரும்பினார்.