Advertisement

இங்கிலாந்து மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை டர்பியில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement
இங்கிலாந்து மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச ல
இங்கிலாந்து மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச ல (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 29, 2025 • 02:00 PM

ENGW vs WIW, 1st ODI Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 29, 2025 • 02:00 PM

இதனையடுத்து இங்கிலாந்து மகளிர் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகாளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை டெர்பில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி டி20 தொடரை வென்றுள்ள நிலையில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முயற்சியில் உள்ளது. அதேசமயம் டி20 தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரில் அதற்கான பதிலடியைக் கொடுக்க காத்திருக்கிறது. இதனால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

ENGW vs WIW: Match Details

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர்
  • இடம் - கவுண்டி மைதானம், டெர்பி 
  • நேரம்- மே 30, மாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

ENGW vs WIW: Live Streaming Details

அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் சோனி லிவ் மற்றும் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காணலாம்.

ENGW vs WIW: Head-to-Head

  • Total Matches: 26
  • England: 18
  • West Indies: 06
  • No Result: 02

ENGW vs WIW: Ground Pitch Report

இந்த போட்டி டெர்பியில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 18 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 14 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 4 முறை முதலில் பந்துவீசிய அணியும் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 235 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 284 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

ENGW vs WIW: Possible XIs

England: டாமி பியூமண்ட், சோஃபிய டங்க்லி, ஹீதர் நைட், நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கேப்டன்), ஆமி ஜோன்ஸ், ஆலிஸ் கேப்ஸி, எமிலி ஆர்லாட், சார்லோட் டீன், லாரன் ஃபிலர், லாரன் பெல், லின்ஸி ஸ்மித்.

West Indies: ஹீலி மேத்யூஸ் (கேப்டன்), கியானா ஜோசப், ஜைடா ஜேம்ஸ், ரியாலினா கிரிம்மண்ட், ஷபிகா கஜ்னாபி, ஆலியா அலீன், ஜன்னிலியா கிளாஸ்கோ, மாண்டி மங்ரு, செர்ரி ஆன் ஃப்ரேசர், அஃபி பிளெட்சர், கரிஷ்மா ராம்ஹராக்

ENGW vs WIW: Dream11 Team

  • Wicket-keeper: ஏமி ஜோன்ஸ்
  • Batters: ஹீதர் நைட், சோஃபியா டங்க்லி, ஷபிகா கஜ்னாபி
  • All-rounders: ஹீலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர் பிரண்ட், ஸைதா ஜேம்ஸ், எமிலி ஆர்லாட்
  • Bowlers: லாரன் பெல், அஃபி பிளெட்சர், லின்ஸி ஸ்மித்

ENGW vs WIW Match 1 Dream11 Prediction, ENGW vs WIW Dream11 Prediction, Today Match ENGW vs WIW Prediction, ENGW vs WIW Dream11 Team, Fantasy Cricket Tips, ENGW vs WIW Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England Women vs West Indies Women

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement