
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டித் தொடரில் நியூசிலாந்து அணி மோதி வருகிறது. இதன் முதல் போட்டி, தற்போது டிராவில் முடிவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணிக்காக, இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஓல்லி ராபின்சன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியிருந்தார்.
தான் கால் தடம் பதித்த முதல் சர்வதேச போட்டியில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் பெற்ற ராபின்சனுக்கு, மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்றும் காத்திருந்தது. 8 ஆண்டுகளுக்கு முன், பாலியல், இனவெறி தொடர்பாக ராபின்சன் செய்த ட்வீட்கள், அவர் கிரிக்கெட் உலகில் அசத்தலான அறிமுகத்தை பெற்ற சமயத்தில் வைரலானதால், அவர் மீது அதிக விமர்சனங்கள் எழுந்தது.