Advertisement

‘இந்த மைதானத்தில் எந்த இலக்கும் வெற்றிக்கு போதுமானதாக இருக்கும்' - ஈயான் மோர்கன்

இந்தியாவுக்கு எதிரான வெற்றிக்கு பிறகு பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஈயான் மோர்கன், நரேந்திர மோடி மைதானத்தில் எந்த இலக்கும் வெற்றிக்கு போதுமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Advertisement
Cricket Image for ‘இந்த மைதானத்தில் எந்த இலக்கும் வெற்றிக்கு போதுமானதாக இருக்கும்' - ஈயான் மோர்கன்
Cricket Image for ‘இந்த மைதானத்தில் எந்த இலக்கும் வெற்றிக்கு போதுமானதாக இருக்கும்' - ஈயான் மோர்கன் (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 18, 2021 • 10:41 AM

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று (மார்ச் 16) அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் கோலி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அசத்தினார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 18, 2021 • 10:41 AM

அதன்பிறகு, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 83 ரன்களும், பேர்ஸ்டோ 40 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

Trending

இந்நிலையில் போட்டி முடிவுக்குப் பின் வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஈயான் மோர்கன், இந்த போட்டியின் முதல் பாதியில் எங்களது பவுலிங் சிறப்பாக இருந்தது. எங்களுடைய பந்துவீச்சாளர்கள் அனைவரும் சரியான லைன் & லென்த்தில் பந்து வீசினர். 

மேலும் போட்டிக்கு முன்னர் நாங்கள் என்ன திட்டத்தை வைத்துதிருந்தோமோ, அதே திட்டத்தின்படி துவக்கத்திலேயே விக்கெட்டை வீழ்த்தியது எங்களது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்திய வீரர்களை துவக்கத்திலேயே வீழ்த்தியதால் ஆட்டத்தில் பெரிய வித்தியாசம் ஏற்பட்டது. மேலும் இந்த மைதானத்தில் எந்த இலக்கும் வெற்றிக்கு போதுமானதாக இருக்கும். 

இப்போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடி எங்களது அணியின் தரத்தை நிரூபித்துள்ளோம். ஜோஸ் பட்லர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். அவர் எங்களது அணியில் இருப்பது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என நினைக்கிறேன். அதேசமயம் சர்வதேச டி20 அரங்கில் நான் எனது 100வது போட்டியில் நான் விளையாடியதை மிகப் பெருமையாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement