
ஐபிஎல்யின் 15ஆவது சீசனில் நேற்று நடந்த பதினோராவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஜடேஜா, பந்துவீச்சை தேர்வுசெய்தார்.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில், தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கேப்டன் மயங்க் அகர்வால், 4 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பானுகா ராஜபக்சவும் தோனியின் அதிவேக கீப்பிங் திறமையால் ரன் அவுட் ஆக, பிறகு சேர்ந்த ஷிகர் தவான், லிவிங்ஸ்டன் ஜோடி பொறுப்பாக விளையாடி 95 ரன்களை சேர்த்தது. இதையடுத்து வந்த வீரர்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க, பஞ்சாப் கிங்ஸ் 20 ஒவர்களின் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு, 180 ரன்களை எடுத்தது.
181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் ஆரம்பம் முதலே பேரிடராக அமைந்தது. தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ், பவர்பிளேவிலேயே 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. ருதுராஜ் (1), உத்தப்பா (13),மொயின் (0), அம்பத்தி ராயுடு (13) ஆகியோர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஜடேஜாவும் டக் அவுட் ஆனார்.