
ஐபிஎல் தொடரிலிருந்து 2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி வெளியேறியது. பரபரப்பான லீக் ஆட்டத்தில், லக்னோ அணியுடன் கொல்கத்தா பலப்பரீட்சை நடத்தியது.
டி20 போட்டிக்கு என்ற உரிய பரபரப்பும், திருப்புங்கள் நிறைந்த போட்டியாக இது அமைந்தது. சொல்லபோனால் ஐபிஎல் தொடரிலேயே சிறந்த போட்டியாக இது கருதப்படும். இந்த போட்டியில் மொத்தம் 418 ரன்கள் விளாசப்பட்டது. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆட்டம் தொடங்கியதும் இருவரும் விக்கெட்டை இழந்து விடக் கூடாது என்ற நோக்கில் பொறுமையாக விளையாடினர். 7.2வது ஓவரில் தான் லக்னோ அணியின் ஸ்கோரே 50 ரன்களை தொட்டது. அதன் பின்னர், சிக்சா, பவுண்டரி என விராட்டிய டி காக் 36 பந்தில் அரைசதம் அடிக்க, மறுபுறம் பொறுமையாக ஆடிய ராகுல் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் 12.4வது ஓவரில் லக்னோ அணி 100 ரன்களை எட்டியது. சிக்சர் சிக்கசராக பறக்கவிட்ட குயின்டன் டி காக் 59 பந்துகளில் சதம் விளாசினார்.