ஐபிஎல் 2022: மும்பையை வீழ்த்துவதே தனி சந்தோசம் தான் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
15ஆவது ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணி, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.
புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டூபிளசி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
Trending
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 68* ரன்கள் எடுத்தார்.
இதன்பின் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு, அந்த அணியின் கேப்டனும் துவக்க வீரருமான டூபிளசிஸ் 16 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான அனுஜ் ராவத் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 66 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய விராட் கோலியும் தன் பங்கிற்கு 36 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.3 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டனான டூபிளசிஸ், மும்பை போன்ற பலம் வாய்ந்த அணியை வீழ்த்துவது மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து டூபிளசிஸ் பேசுகையில், “மும்பை இந்தியன்ஸ் போன்ற பலம் வாய்ந்த அணியை வீழ்த்தி வெற்றி பெறுவது கூடுதல் மகிழ்ச்சியை கொடுக்கும். பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். பேட்டிங்கிலும் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சிறப்பாகவே செயல்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. வெற்றியின் மூலம் இந்த இடத்தில் நிற்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்க்ளை பெரிதாக் ரன் குவிக்க விட கூடாது என திட்டமிட்டிருந்தோம். ரோஹித் சர்மா சில சிறந்த ஷாட்கள் அடித்தார், அவரது விக்கெட்டை விரைவாக கைப்பற்றியது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. ஆகாஷ் தீப் மிக சிறப்பாக பந்துவீசினார்.
அனுஜ் ராவத் மிக சிறந்த கிரிக்கெட் வீரர், இவர் எதிர்காலத்திற்கான மிக சிறந்த கிரிக்கெட் வீரர் என இந்த தொடர் துவங்குவதற்கு முன்பே நான் கூறிவிட்டேன். அனுஜ் ராவத்துடன் அதிகமான விசயங்கள் பேசியுள்ளேன், அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now