
Faf Du Plessis On Playing Against CSK! (Image Source: Google)
ஐபிஎல்-இன் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு பிளெசிஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். பெங்களூரு அணியில் ஜோஷ் ஹேசில்வுட் முதன்முறையாக களமிறங்குகிறார்.
இந்த ஆட்டத்தை சகோதரர்களுக்கு எதிராக விளையாடுவதுபோல் கருதுவதாக குறிப்பிட்ட டு பிளெஸ்ஸி, சிஎஸ்கேவைப் பற்றி தனக்குத் தெரியும் என்றும் அதுபோல தன்னைப் பற்றி அவர்களுக்குத் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.