
faf-du-plessis-suffers-injury-in-scary-collision-during-psl-2021-game-watch (Image Source: Google)
அபுதாபியில் நடந்து வரும் பி.எஸ்.எல் தொடரின் 19ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ், பெஸ்வ ஸால்மி அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியின் 7ஆவது ஓவரின் போது டேவிட் மில்லர் அடித்து பந்து பவுண்டரியை நோக்கிச் சென்றது. அதனைத் தடுக்க குயிட்டா அணியில் இடம்பெற்ற தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் டூ பிளெஸிஸ் அதனை தடுக்க ஓடினார்.
அப்போது சக வீரரான முகமது ஹஸ்னைன் என்பவரது காலில் அவரது தலை மோதியது. இதில் படுகாயமடைந்து சுருண்டு விழுந்த டூ பிளெஸிஸிக்கு அணி மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.