Advertisement

சர்ச்சையில் சிக்கிய இலங்கை வீரர்கள்; ஐந்து பேர் கொண்ட குழு விசாரிக்க உத்தரவு!

பயோ பபுள் விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

Advertisement
Five-Member Panel To Probe Sri Lanka Cricketers' Breach
Five-Member Panel To Probe Sri Lanka Cricketers' Breach (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 07, 2021 • 10:30 PM

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் இலங்கை அணி, இங்கிலாந்து அணியிடம் இழந்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 07, 2021 • 10:30 PM

இதற்கிடையில் இலங்கை வீரர்களான நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகிய மூவரும் பயோ பபுள் பாதுகாப்பு சூழலை விட்டு வெளியேறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் டர்ஹம் சிட்டி செண்டர் என்கிற பொது இடத்தில் மெண்டிஸும், டிக்வெல்லாவும் இருந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியானது. 

Trending

இருவர் கைகளிலும் முகக்கவசம் இருந்தாலும் இருவரும் அதை அணிந்திருக்கவில்லை. சிட்டி செண்டர் பகுதியில் காரில் சென்ற ஒருவர் அவர்களுக்குத் தெரியாமல் விடியோ எடுத்துள்ளார். இவர்களுடன் வெளியேறிய தனுஷ்கா குணதிலக ஆக்கணொளியில் இடம்பெறவில்லை.

இந்த காணொளி வெளியான பிறகு மூன்று வீரர்களும் பயோ பபுள் சூழலை விட்டு வெளியேறியது பற்றி விசாரணை நடைபெற்றது. இதில் மூவரும் பயோ பபுள் சூழலை விட்டு வெளியே சென்றதை ஒப்புக்கொண்டார்கள். இதையடுத்து மூவருக்கும் இடைக்காலத் தடை விதித்து இங்கிலாந்திலிருந்து வெளியேற்றியுள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். மூவரும் விமானத்தில் இலங்கைக்குத் திரும்பியுள்ளார்கள்.

இந்நிலையில் இலங்கை திரும்பியுள்ள கிரிக்கெட் வீரர்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நிதிப்பதி தலைமையின் கீழ் ஐந்து பேர் கொண்ட குழுவை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட வீரர்கள் அனைவரும் இந்த குழுவின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement