
Former Delhi Capitals Net Bowler - Nivethan Radhakrishnan, Named In Australia U-19 Squad For The Wor (Image Source: Google)
ஜனவரி 14 முதல் வெஸ்ட் இண்டீஸில் அண்டர்-19 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் 19 வயது நிவேதன் ராதாகிருஷ்ணன் என்கிற தமிழர் இடம்பிடித்துள்ளார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் இருமுறை பங்கேற்றுள்ள நிவேதன், ஐபிஎல் 2021 போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இடம்பெற்றார். சுழற்பந்து வீச்சாளரான நிவேதன், இரு கைகளிலும் பந்துவீசும் திறமை கொண்டவர்.
சென்னையைச் சேர்ந்த நிவேதன், பத்து வயது முதல் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா அணிக்காக விளையாடி வருகிறார். ஆஸ்திரேலிய அணிக்காக அண்டர்-16 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இப்போது ஆஸி. அணியின் உலகக் கோப்பை அணியிலும் இடம்பெற்றுள்ளார்.