
Former India Spinner's Hilarious "Postpaid, Prepaid" Comment On Rishabh Pant (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியாவும், 2ஆவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.
இரண்டாவது போட்டியின் 2ஆவது இன்னிங்சில் இந்திய அணி 163 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்திருந்த போது ரிஷப் பந்த் களம் இறங்கினார். அப்போது ஹனுமா விஹாரியும் களத்தில் இருந்தார். ஆனால் ரிஷப் பந்த் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். ரபாடா வீசிய பந்தை அடித்து ஆட முயற்சித்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றிபெற சமமான வாய்ப்பு இருந்தது. இதை இந்தியா தவறவிட்டது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இப்போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆடியதை குறித்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.