காரோனா தொற்றால் ஆர்.பி.சிங்கின் தந்தை உயிரிழப்பு!
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங்கின் தந்தை கரோனாவால் உயிரிழந்தார்.
இந்தியாவில் கரோனா 2வது அலையின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் அவலம் நிலவுகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் தந்தை ஷிவ் பிரசாத் சிங் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இத்தகவலை ஆர்.பி.சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.
Trending
இதுகுறித்து ஆர்.பி.சிங் தனது ட்விட்டரில், "எனது தந்தை ஷிவ் பிரசாத் சிங் காலமானதை ஆழ்ந்த வருத்தத்துடன், சோகத்துடனும் தெரிவிக்கிறோம். அவர் காரோனா நோயால் பாதிக்கப்பட்டு மே 12 ஆம் தேதி காலமானார்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு சமூக தளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக இளம் வீரர் சேதன் சக்காரியா, அனுபவ வீரர் பியூஷ் சாவ்லா ஆகியோரது தந்தை கரோனா தொற்றால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now