Advertisement

பிசிசிஐ ஜூனியர் கிரிக்கெட் தேர்வு குழு தலைவராக ஸ்ரீதரன் சர்த் நியமனம்!

பிசிசிஐ ஜூனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக முன்னாள் தமிழ்நாடு அணி கேப்டன் ஸ்ரீதரன் சரத்  நியமிக்கப்பட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 17, 2021 • 16:27 PM
Former Tamil Nadu Batter Sridharan Sarath Named Chairman Of BCCI Junior Committee
Former Tamil Nadu Batter Sridharan Sarath Named Chairman Of BCCI Junior Committee (Image Source: Google)
Advertisement

அகில இந்திய ஜூனியர் தேர்வுக் குழுவை உறுப்பினர்கள் நியமனம் குறித்த அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு கிரிக்கெட அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீதரன் சரத் இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Trending


தமிழ்நாட்டிற்காக 100 ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் ஸ்ரீதரன் சரத் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தனது 15 ஆண்டு கால உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கையில், 139 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 51.17 சராசரி உடன் 27 சதங்கள் மற்றும் 42 அரைசதங்கள் உட்பட 8,700 ரன்கள் அடித்துள்ளார். மேலும் 100 -க்கும் மேற்பட்ட உள்ளூர் போட்டிகளில் விளையாடி 3,000 ரன்களுக்கு மேல் அடித்தள்ளார்.

மேலும் ஸ்ரீதரன் சரத் பிசிசிஐ போட்டி நடுவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து 2022ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவிருக்கும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பைக்கான இந்திய அணியை ஸ்ரீதரன் சரத் தலைமையிலான தேர்வுக் குழு தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

பிசிசிஐ ஜூனியர் கிரிக்கெட் அணி தேர்வுக் குழு உறுப்பினர்கள் விவரம்:

  •     சரத் ஸ்ரீதரன் (தெற்கு மண்டலம்) - தலைவர்
  •     பதிக் படேல் (மேற்கு மண்டலம்)
  •     ரணதேப் போஸ் (கிழக்கு மண்டலம்)
  •     கிஷன் மோகன் (வடக்கு மண்டலம்)
  •     ஹர்விந்தர் சிங் சோதி (மத்திய மண்டலம்) 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement