Advertisement

சொந்த நாட்டில் வாய்ப்பில்லாமல் தவிக்கும் உலகக்கோப்பை கேப்டன்; அமெரிக்காவிற்காக விளையாடும் அவலம்!

  கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்க

Advertisement
Former U-19 WC winning-captain Unmukt Chand among players who have arrived in US, claims Sami Aslam
Former U-19 WC winning-captain Unmukt Chand among players who have arrived in US, claims Sami Aslam (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 11, 2021 • 09:02 PM

கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டவர் உன்முக் சந்த். அந்த தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் அற்புதமான ஒரு சதமடித்து உலகக் கோப்பையை இந்தியாவிற்காக கைப்பற்றி கொடுத்தார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 11, 2021 • 09:02 PM

அப்போது அனைத்து பத்திரிக்கைகளும் உன்முக் சந்த்தை பாரட்டி எழுதியதோடு மட்டுமல்லாமல், இந்திய அணிக்கு அடுத்த விராட் கோலி கிடைத்துவிட்டார் என்றெல்லாம் புகழ்ந்தது. ஆனால் அப்படிப்பட்ட வீரர், இந்தியாவில் தன்னுடைய திறமையை நிரூபிக்க சரியான வாய்ப்பு கிடைக்காததால் தற்போது அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாட சென்றுவிட்டார

Trending

அவருடன் 2012 இந்திய அணியில் விளையாடிய சந்தீப் ஷர்மா ஐபிஎல் தொடரிலும், ஹனுமா விஹாரி இந்திய டெஸ்ட் அணியிலும் விளையாடி வரும் சூழ்நிலையில், இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு உலகக் கோப்பையை பெற்று தந்த உன்முக் சந்த், அமெரிக்காவிற்காக கிரிக்கெட் விளையாட சென்றது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

2012ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய உன்முக் சாந்திற்கு, 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு அளித்தது டெல்லி அணி. ஆனால் கிடைத்த வாயப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறிய உன்முக் சந்தை அடுத்த வருடமே அணியிலிருந்து விடுவித்தது டெல்லி அணி நிர்வாகம்.

2014ஆம் ஆண்டு உன்முக் சந்தை, ரூபாய் 65 இலட்சத்திற்கு ஏலத்தில் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம், அந்த தொடர் முழுவதும் அவருக்கு விளையாட வாய்ப்பு அளிக்காமல், வெளியவே அமர வைத்தது. 

ஏற்கனவே விளையாட வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வெளியில் அமர்ந்திருந்த உன்முக் சாந்தை, அடுத்த ஆண்டு அணியிலிருந்தே விடுவித்து அவருக்கு மேலும் ஏமாற்றத்தை அளித்தது ராஜஸ்தான் அணி நிர்வாகம். அதே தவறை அடுத்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியும் செய்தது.

ஐபிஎல் போட்டிகளில் விளையாட போதிய வாய்ப்புகள் கிடைக்காத உன்முக் சாந்த், இந்தியா A அணிக்கு பல காலமாக கேப்டனாக செயல்பட்டு வந்தார். ஆனாலும் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. 

இதற்கிடையில் அமெரிக்கா, தங்களது நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக கடந்த சில ஆண்டுகளாகவே முயற்சித்து வருகிறது. இந்தியாவில் தனது திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைக்காத உன்முக் சந்த், இந்நிலையில் தான் அமெரிக்காவிற்காக கிரிக்கெட் விளையாடப்போகும் முடிவை எடுத்து, அங்கு சென்றுள்ளார்.

உன்முக் சந்துடன் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்களான ஸ்மித் பட்டேல், ஹர்மீத் சிங் ஆகியோர் ஏற்கனவே அமெரிக்க அணிக்காக விளையாட அங்கு சென்றுள்ள நிலையில், தற்போது அப்பட்டியலில் உன்முகுந்த் சந்தும் இடம்பெற்றுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement