
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் மிகவும் மோசமாக சரிந்திருந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் மீது பிற உலக நாடுகளுக்கு ஒரு அனுதாபப் பார்வை எப்பொழுதுமே இருந்து வருகிறது. அவர்கள் தங்கள் நாட்டு அணியை வென்றாலும் கூட வெஸ்ட் இண்டீஸ் வெற்றியை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக பிற நாட்டு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஏனென்றால் அந்த அளவிற்கு ஆரம்ப காலகட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் விளையாடக்கூடிய அதிரடி முறை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகவும் இருக்கிறது. எனவே அவர்களின் இருப்பு உலக கிரிக்கெட்டில் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவசியப்படுகிறது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இரண்டு முறை 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு டி20 உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்த வீரரான மர்லான் சாமுவேல்ஸ் மீது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சூதாட்ட புகார் வெளிவந்து இருக்கிறது. இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச அளவில் 300க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து இருக்கிறார்.