
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஆறுதல் வெற்றிக்காக இலங்கை களமிறங்கியது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். வார்னர் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த தீக்சனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் ஆரோக் பிஞ்ச் 20 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். கிளன் மேக்ஸ்வெல் 16 ரன்கள் எடுக்க, ஜோஸ் இங்லிஸ் முதல் பந்திலேயே ரன் அவுட் ஆனார். ,தனால் ஆஸ்திரேலிய அணி 12.3வது ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினாலும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை அடித்தனர்.