தோனி குறித்து பேசிய ராகுல் திரிபாதி!
மகேந்திர சிங் தோனி தலைமையில் விளையாடியது குறித்து மனம் தொறந்த ராகுல் திரிபாதி.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இந்திய வீரர் ராகுல் திரிபாதியை 8.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
இந்நிலையில், ராகுல் திரிபாதி தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “பெரிய போட்டிகளுக்கு முன் தோனி எப்படி அமைதியாக இருப்பது என்பதை வெளிப்படுத்தினார். தனது அணி வீரர்களை எப்போதும் இளைய சகோதரர்களைப் போல நடத்துகிறார். அவர்களின் உயர்வு மற்றும் தாழ்வுகளுக்கு வழிகாட்டுகிறார்.
ஐபிஎல் 2021 இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணி சென்னை சூப்பர் கிங்சிடம் தோற்றது. விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் எடுத்து வலுவாக இருந்த நிலையில், திடீரென சரிவு ஏற்பட்டது. இதனால் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்து, 27 ரன் வித்தியாசத்தில் தோற்றது வருத்தமாக இருந்தது.
தொடையில் காயம் ஏற்பட்டதால், ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் வந்தேன். என்னால் ரன் எடுக்க முடியவில்லை. விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதற்கு மிகவும் சிரமப்பட்டேன். நான் வெளியே வந்தபிறகு, மஹி பாய் என் முதுகில் தட்டி ஆறுதல் கூறினார். இது உனக்கான நாள் அல்ல. ஆனால் நூறு சதவீதம் ஆட்டத்தைக் கொடுத்தீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now