
Full Schedule: West Indies To Host Australia, South Africa, Pakistan In June-August (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தாண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுடன் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
அதன்படி ஜூன் மாதம் தென் ஆப்பிரிக்க அணியுடன் இரண்டு டெஸ்ட், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், ஜூலை மாதத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் ஐந்து டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தான் அணியுடன் ஐந்து டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது.
இதன் மூலம் மூன்று மாதங்களில் 15 சர்வதேச டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடவுள்ளது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இத்தொடர்களுக்கான முழு அட்டவணையும் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.