
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 46ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. எம்எஸ் தோனி கேப்டனாக மீண்டும் திரும்பியது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த நிலையில், 'டாஸ்' வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஹைதராபாத் பந்து வீச்சாளர்கள் திணறினர்.
முதல் 6 ஓவர்கள் வரை நிதானமாக விளையாடிய ருதுராஜ் அதன் பின்னர் வேகம் எடுத்தார். பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிகளுமாக பறக்க விட்டார். சிறப்பாக ஆடி சதத்தை நெருங்கும் வேளையில், நடராஜன் வீசிய 18ஆவது ஓவரில் ருதுராஜ் ஆட்டமிழந்தார். ருதுராஜ் 57 பந்துகளில் 99 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் தலா 6 பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடங்கும்.