
Galle Gladiators Defeat Dambulla Giants By 9 Runs In Rain-Hit Game (Image Source: Google)
லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் கலே கிளாடியேட்டர்ஸ் - தம்புலா ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டி தொடங்கும் முன்பே மழை பெய்ததால் ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கலே கிளாடியேட்டர்ஸ் அணி குசால் மெண்டிஸ், பனுகா ராஜபக்ஷ ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 14 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களைச் சேர்த்தது.
இதில் குசால் மெண்டிஸ் 35 ரன்களையும், ராஜபக்ஷ 33 ரன்களையும் சேர்த்தனர். ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் இம்ரான் தஹிர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.