டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த கவுதம் கம்பீர்!
பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கான இந்திய அணியின் தனது உத்தேச ஆடும் லெவனை முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் தேர்வுசெய்துள்ளார்.
டி20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 16ஆம் தேதி துவங்கிய இந்த தொடர் நவம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற வலுவான அணிகளுக்கான போட்டிகள் இன்று முதல் துவங்க உள்ளது. இந்திய அணி 23ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
Trending
கடந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, முக்கியமான இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்து இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்து வெளியேறியது.
இதனால் நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலாவது பாகிஸ்தானிற்கு இந்திய அணி சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். மற்ற அனைத்து போட்டிகளையும் விட இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருவதால், முன்னாள் வீரர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். முன்னாள் இந்திய வீரர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர், பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கான அவரது உத்தேச ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
அவரது அணியில் பேட்டர்களாக ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தேர்வு செய்துள்ள கம்பீர், விக்கெட் கீப்பராக ரிஷப் பந்தை தேர்வு செய்துள்ளார். தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பந்திற்கு இந்த முறை இந்திய அணி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கம்பீர் தெரிவித்தார்.
ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என கணித்துள்ள கம்பீர், பந்துவீச்சாளர்கள் வரியில் யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஹர்சல் பட்டேல் ஆகியோருடன், புவனேஷ்வர் குமார் அல்லது அர்ஸ்தீப் சிங் ஆகிய இருவரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
கவுதம் கம்பீரின் உத்தேச ஆடும் லெவன்:
ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் பட்டேல், ஹர்சல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஸ்தீப் சிங்/புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.
Win Big, Make Your Cricket Tales Now