
Ganguly picks favourite between NZ-AUS ahead of T20 World Cup showdown (Image Source: Google)
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி துபாயில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் சம பலத்துடன் இருக்கும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்று மாலை 7.30 மணிக்குத் தொடங்கும் இந்த போட்டியில் டாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளில் யார் வெல்வார்கள் எனப் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் "சர்வதேச அரங்கில் நியூசிலாந்து தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா ஒரு சிறந்த அணி தான். இருப்பினும், அவர்கள் தற்போது கடினமான சூழ்நிலையில் உள்ளனர். நாம் டிவியில் பார்ப்பதைவிட நியூசிலாந்து அணிக்கு அதிக துணிச்சலும் போராடும் குணமும் உள்ளது.