
Gargi Banerjee appointed Indian women's team manager for Australia tour (Image Source: Google)
இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது.
இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி அடுத்த மாத தொடக்கத்தில் தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியா செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய மகளிர் அணியின் மேலாளராக முன்னாள் வீராங்கனை கார்கி பானர்ஜி இன்று நியமிக்கப்பட்டார். இத்தகவலை பெங்கால் கிரிக்கெட் வாரியம் தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளது.