ஐபிஎல் 2022: லக்னோ அணியின் ஆலோசகராக காம்பீர் நியமனம்!
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னோ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன.
இதனால் ஐபிஎல் 2022 தொடரில் விளையாடும் வீரர்களுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் லக்னோ அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பிரபல முன்னாள் வீரர் ஆன்டி ஃபிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியை வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்த கேப்டனாக செயல்பட்டுள்ள கவுதம் காம்பீர், தற்போது லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now