
இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியில் உள்ள சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரிஷப் பந்த் தலைமையிலான இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடுகிறது.
முதலாவது டி20 போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 211 ரன்களை குவித்தாலும் பந்துவீச்சில் சரிவர திட்டங்களை செயல்படுத்தாததால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்றும் இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தனது கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த போட்டியில் 400 ரன்களுக்கு மேல் இரு அணிகளும் குவித்தும் தனக்கு கொடுக்கப்பட்ட நான்கு ஓவர்களில் 35 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்த இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கானை இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஆவேஷ் கான் நிறைய திறமை உடைய பந்துவீச்சாளராக திகழ்கிறார். அவரிடம் நல்ல வேகம் இருக்கிறது. அதேபோன்று இக்கட்டான வேளைகளில் முக்கியமான ஓவர்களை வீசும் தாராள மனசும் அவரிடம் இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் அவர் தன்னைத் தானே முன்னேற்றிக் கொண்டு வருகிறார்.