கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல்!
இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்பியுமான கௌதம் கம்பீருக்கு (Gautam Gambhir) ஐஎஸ்ஐஎஸ்-காஷ்மீர் (ISIS-Kashmir) அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் மிரட்டுவதாக டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிகாக பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் கவுதம் கம்பீர். தற்போது பாஜக எம்.பியாக செயல்பட்டு வருகிறார்.
கிரிக்கெட், அரசியல் என அவ்வப்போது இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் சூழலில், தற்போது அவரின் உயருக்கே ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Trending
டெல்லியில் வசித்து வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இன்று காலை திடீரென டெல்லி காவல்துறையை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தனக்கு இன்று மின்னஞ்சல் மூலமாக கொலை மிரட்டல் வந்துள்ளது. அதனை ஐ.எஸ்.ஐ. எஸ் தீவிரவாத அமைப்பு அனுப்பியுள்ளது என புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள், உடனடியாக கம்பீரின் இல்லத்திற்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அந்த மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து வல்லுநர்களை வரவழைத்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவருக்கு இந்த கொலை மிரட்டல் வந்ததிற்கான காரணமாக, அவர் ட்விட்டர் பதிவு அமைந்துள்ளது. அதாவது, சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது மூத்த சகோதரர் போன்றவர் என கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் போட்டிருந்த கம்பீர், முதலில் உங்களின் வீட்டில் இருந்து யாரையேனும் எல்லைக்கு அனுப்பி பாருங்கள், அதன் பிறகு தீவிரவாத நாட்டின் தலைவரை சகோதரர் என்றுக் கூறுவீரர்களா என்று நான் பார்க்கிறேன் என சாடியிருந்தார்.
இதே போல பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமான படை கேப்டன் அபிநந்தனுக்கு சமீபத்தில் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. அப்போது அவரின் புகைப்படத்தை பதிவிட்டு, தனது சகோதரர் இவர் என கம்பீர் குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டு விஷயங்கள் தான் தற்போது ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததற்கு காரணம் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now