Advertisement

டி20 உலகக்கோப்பை: மகேந்திர சிங் தோனியை புகழ்ந்த கவுதம் காம்பீர்!

எந்தவொரு இந்திய கேப்டனாலும் மூன்று ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாது என முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Gautam Gambhir said,
Gautam Gambhir said, "I don't think any Indian captain would be able to achieve 3 ICC trophies like (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 12, 2022 • 11:48 AM

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மிக மோசமான தோல்வியை தழுவி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணி இதற்கு முன்னர் பெற்ற ஐசிசி வெற்றிகள் குறித்தும், உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் குறித்தும் ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 12, 2022 • 11:48 AM

தோல்விகளின் போது முந்தைய தரமான வெற்றிகளுக்கான மதிப்பு கூடிக் கொண்டே இருக்கும். இப்போதும் அது தான் நடந்து வருகிறது. அந்த வகையில்தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி வென்றுக் கொடுத்த டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை வெற்றிகள் இப்போது நினைவலைகளில் வந்து செல்கிறது. இந்திய அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறி உள்ள நிலையில் தோனியை புகழ்ந்துள்ளார் கவுதம் கம்பீர்.

Trending

இதுகுறித்து பேசிய அவர்,“யாரேனும் ஒருநாள் ரோகித் சர்மாவை காட்டிலும் கூடுதலாக இரட்டை சதங்கள் பதிவு செய்யலாம். யாரேனும் ஒருநாள் கோலியை காட்டிலும் கூடுதலாக சதங்களை விளாசலாம். ஆனால் ஒருபோதும் எந்தவொரு இந்திய கேப்டனாலும் மூன்று ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாது என நான் நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement