
Gautam Gambhir tests positive for Covid-19 with mild symptoms (Image Source: Google)
இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர். இவர் இந்திய அணிக்காக 2003 முதல் 2016 வரை 58 டெஸ்டுகள், 147 ஒருநாள், 37 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
தனது ஓய்வுக்குப் பிறகு பாஜகவில் இணைந்து தற்போது மக்களவை உறுப்பினராக உள்ளார். ஐபிஎல் 2022 போட்டியில் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கவுதம் காம்பீருக்கு கரோனா தொற்றூ உறுதிசெய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுக்குப் பிறகு பரிசோதனையில் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.