
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. சீனியர் வீரர்கள் ஜூலையில் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க உள்ளதால் அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, ஐபிஎலில் சிறப்பாக சோபித்த வீரர்களுக்கு இந்த தென்னாப்பிரிக்க தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதில் சிறப்பாக செயல்படுவோருக்கு அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கு டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது எனக் கருதப்பட்டதால், இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், வரும் ஜூன் 26ஆம் தேதிமுதல் அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 15ஆவது சீசனில் கோப்பை வென்ற கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ரிஷப் பந்த் இங்கிலாந்து செல்லும் அணியுடன் இணைய உள்ளதால், அவர் இத்தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை.