Cricket Image for விரைவில் குணமடைந்து வாருங்கள்' சச்சினுக்கு வாழ்த்து கூறிய விவியன் ரிச்சர்ட்ஸ்! (Sir Vivian Richards (Image Source: Google))
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தாம் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக
சனிக்கிழமை (மார்ச் 27) அறிவித்தார். இதையடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என
ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக கரோனா பாதிப்பிலிருந்து சச்சின் டெண்டுல்கர் விரைந்து மீள வேண்டி,
மேற்கிந்திய தீவுகள் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் ட்விட்டரில், “என் சச்சின்
விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன். விரைந்து குணமடையுங்கள் சச்சின் டெண்டுல்கர்.
உலகெங்கிலும் லட்சக்கணக்கான மக்கள் உங்களுக்காக பிரார்த்திக்கின்றனர்” எனத்
தெரிவித்துள்ளார்.