Advertisement

இந்த வெற்றியின் மூலம் பிளேஆஃப் வாய்ப்பை நெருங்கி வருகிறோம் - ரிஷப் பந்த்!

ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் வந்த முதல் நாளிலிருந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இளம் வீரர்களிடன் இது போன்று ஒரு ஆட்டத்தை தான் அனைவரும் எதிர்பார்க்கின்றனர் என டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 27, 2024 • 22:47 PM
இந்த வெற்றியின் மூலம் பிளேஆஃப் வாய்ப்பை நெருங்கி வருகிறோம் - ரிஷப் பந்த்!
இந்த வெற்றியின் மூலம் பிளேஆஃப் வாய்ப்பை நெருங்கி வருகிறோம் - ரிஷப் பந்த்! (Image Source: Google)
Advertisement

டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஷாய் ஹோப், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 84 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 48 ரன்களையும், ஷாய் ஹோப் 41 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் சோபிக்க தவறினர் அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 46 ரன்களையும், தில் வர்மா 63 ரன்கள் சேர்த்த நிலையிலும், மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Trending


இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த், “இந்த போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து 250 ரன்கள் குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதினால் நாளுக்கு நாள் போட்டி கடினமாகி வருகிறது. மேலும் என்னால் ஸ்டம்பிற்கு அருகில் நின்று என்னால் கீப்பிங் செய்ய முடியும் என்றாலும், பந்துவீச்சாளர்கள் தவறான பந்துகளை வீசக்கூடாது என்ற நம்பிக்கையுடன் இருக்கவேண்டும்.

இன்றைய போட்டியில் டிம் டேவிட்  அதிரடியாக விளையாடி வந்த நிலையில், எங்களது இந்த திட்டமானது சரியாக வேலை செய்தது. எங்கள் அணியில் உள்ள ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் வந்த முதல் நாளிலிருந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இளம் வீரர்களிடன் இது போன்று ஒரு ஆட்டத்தை தான் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் அவரது ஆட்டம் மெருகேறி வருகிறது. இந்த வெற்றியின் மூலம் நாங்கள் பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பை நெருங்கி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement