
Glenn Maxwell Set To Miss Pakistan Tour, Start Of IPL 2022 (Image Source: Google)
ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல். இவர் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். மேக்ஸ்வெல் திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. தற்போது இலங்கைக்கு எதிராக டி20 கிரிக்கெட் போட்டியில் மேக்ஸ்வெல் விளையாடி வருகிறார்.
இந்தத் தொடர் முடிந்த உடன் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் சென்று விளையாடுகிறது. அதன்பின் ஐபிஎல் தொடர் வருகிறது. திருமணம் செய்ய இருப்பதால் பாகிஸ்தான் தொடர் முழுவதிலும் விளையாடுவதில்லை என மேக்ஸ்வெல் முடிவு செய்துள்ளார்.
அதேபோல் ஐபிஎல் தொடரில் முதல் பகுதி ஆட்டங்களில் பங்கேற்கமாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.