Advertisement

உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த நான்கு அணிகள் செல்லும் - கிரேக் சேப்பல் கணிப்பு!

இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 20, 2023 • 19:48 PM
உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த நான்கு அணிகள் செல்லும் - கிரேக் சேப்பல் கணிப்பு!
உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த நான்கு அணிகள் செல்லும் - கிரேக் சேப்பல் கணிப்பு! (Image Source: Google)
Advertisement

நடப்பாண்டிற்கான ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக 48 ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது.  அதன்படி அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் வைத்து நடைபெற இருக்கிறது .

இத்தொடரின் முதல் போட்டியில் துவக்க போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளன. மேலும்,  உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி, உலகக்கோப்பை இறுதிப் போட்டி ஆகிய மூன்று போட்டிகளும் இதே மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

Trending


உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான கால அளவே உள்ள நிலையில் தற்போதைய உலக கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது? எந்தெந்த அணிகள் உலக கோப்பையின் அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும் என்பது போன்ற கருத்துக்கணிப்புகளை  முன்னாள் வீரர்களும் துவங்கி விட்டனர். பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்கள் வெவ்வேறான கருத்துக்களை குறிப்பிட்டு இருந்தாலும் அவற்றில் பெரும்பாலான விமர்சகர்களின் கருத்தாக இந்தியா, ஆஸ்திரேலியா, மற்றும் இங்கிலாந்து அணிகள் இடம் பெற்று இருக்கிறது .

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் அரை இறுதிப் போட்டிகளுக்கு எந்தெந்த அணிகள் தகுதி பெறும் என்று தனது கருத்துக்கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்.  இவரது கணிப்பின்படி இந்தியா ஆஸ்திரேலியா இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என தெரிவித்துள்ளார்.

மற்ற ஆசிய அணிகளுக்கும் சிறிது வாய்ப்புகள் இருந்தாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வலுவாக உள்ளதால் அவை தகுதி பெறும் என தெரிவித்திருக்கிறார். மேலும் நியூசிலாந்து அணியின் தற்போதைய பார்ம் அடிப்படையில் அந்த அணி உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டிகளுக்கு தகுதி பெறுவதாக தெரியவில்லை எனவும் கூறி இருக்கிறார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement