ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 32ஆவது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 6ஆம் இடத்தில் உள்ள ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து, புள்ளிப்பட்டியலின் 9ஆம் இடத்தில் உள்ள ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த போட்டியில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் தொடர் தோல்விகளைச் சந்தித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் கடந்த போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
- மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
- இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அஹ்மதாபாத்
- நேரம் - இரவு 7.30 மணி
பிட்ச் ரிப்போர்ட்
நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இங்கு களத்தில் நின்று விளையாடும் பேட்டர்கள் பெரிதளவில் ரன்களைக் குவிக்கலாம். மேலும் இங்கு பவுண்டரி எல்லைகள் பெரிதாக இருப்பதால், பந்துவீச்சாளர்கள் எப்போது வேண்டுமானாலும் விளையாட்டில் கம்பேக் கொடுப்பார்கள். மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 160 ரன்களாக உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 03
- குஜராத் டைட்டன்ஸ் - 02
- டெல்லி கேப்பிட்டல்ஸ் - 01
- விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த் (துணை கேப்டன்)
- பேட்ஸ்மேன்கள் - பிருத்வி ஷா, ஷுப்மன் கில் (கேப்டன்), ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க், சாய் சுதர்ஷன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
- ஆல்ரவுண்டர் - அக்ஸர் படேல், ராகுல் திவேத்தியா
- பந்துவீச்சாளர்கள் - மோஹித் சர்மா, குல்தீப் யாதவ், ரஷித் கான்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News